புதுச்சேரி

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி

புதுச்சேரி அரசு ஊழியர்கள் சம்மேளன இணைப்பு சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மிஷன் வீதி மாதா கோவில் அருகே நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் செல்வன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார். நிர்வாகி ஆனந்தசாதன் தொடக்க உரையாற்றினார். நிவாகி கலைச்செல்வன், பொதுச்செயலாளர் முருகேவல் ஆகியோர் சிறப்புரையாற்றினார். பொருளாளர் அருள்தாஸ், செயலர்கள் பூங்கோதை, ராஜா, சுமித்ரா, தனசேகர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய நிலுவை வழங்க வேண்டும். புதுவை அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு