சினிமா துளிகள்

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தன்னைப் பற்றி வெளிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இது விஜய்க்கு 66-வது படம். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராக உள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவியது.

ஏற்கனவே விஜய்யுடன் பைரவா சர்கார் ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். புதிய படத்தில் விஜய்யுடன் மீண்டும் நடிக்கிறீர்களா? என்று கீர்த்தி சுரேசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ், விஜய்யின் 66-வது படத்தில் நான் நடிக்கவில்லை. அவர் ஜோடியாக நான் நடிப்பதாக வெளியான தகவல் வதந்திதான் என்றார். இதையடுத்து விஜய்யின் 66-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்