சினிமா துளிகள்

புதிய அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ், 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பின்னர் தெலுங்கில் மகாநடி படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார்.

தற்போது சிரஞ்சீவியுடன் வேதாளம் ரீமேக், மகேஷ் பாபுவுடன் சர்காரு வாரி பாட்ட சுரு, மோகன் லாலுடன் மரைக்காயர் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில் மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார்.

வாஷி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை விஷ்ணு ஜி ராகவ் இயக்குகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக டோவினோ தாமஸ் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். வாஷி படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்