புதுச்சேரி

அம்பேத்கர் சிலைக்கு, அமைச்சர் சந்திரபிரியங்கா மாலை அணிவிப்பு

காரைக்காலில் டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அமைச்சர் சந்திர பிரியங்கா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காரைக்கால்

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தையொட்டி, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, கலெக்டர் முகமது மன்சூர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. சார்பில் காரைக்கால் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ நாஜிம், நிரவி-திரு.பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ நாக.தியாகராஜன், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமுருகன், திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ சிவா, அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் ஓமலிங்கம், காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட தலைவர் சந்திரமோகன், அம்பேத்கர் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டு மையம், விடுதலை சிறுத்தை, பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின அமைப்பு, எஸ்.சி.-எஸ்.டி மக்கள் நல கூட்டமைப்பு, காரைக்கால் நகர தலித் மற்றும் பழங்குடியினர் மக்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்பேத்கர் அமைப்பின் நிர்வாகிகள், பள்ளி மாணவர்கள் அம்பேத்கர் சிலைக்கு தனித்தனியே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்