சினிமா துளிகள்

அம்மா அவதாரம் எடுத்த நயன்தாரா..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா அடுத்ததாக அம்மா அவதாரம் எடுத்துள்ளார்.

நயன்தாரா நடித்து முடித்திருக்கும் படம் ஓ-2 என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. விக்னேஷ் என்பவர் இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட இருக்கிறார்கள். சமீபத்தில் கொரோனாவால் ஆக்சிஜன் என்பது எவ்வளவு அவசியம் என்பதை அனைவரும் தெரிந்து கொண்டோம். அதை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் விக்னேஷ்.

விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சினைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை பேருந்தில் சக பயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான் ஓ-2. தமிழ்நாடு, கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அம்மா பார்வதியாக நயன்தாரா நடிக்கிறாராம்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்