செய்திகள்

தஞ்சையில் 15 வயது சிறுமி கொரோனாவிற்கு உயிரிழப்பு

தஞ்சையில் 15 வயது சிறுமி கொரோனாவிற்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சை,

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,245 ஆக உள்ளது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் தாராசுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி கடந்த 19ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

தஞ்சையில் 15 வயது சிறுமி கொரோனாவிற்கு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்