செய்திகள்

2 சிறுமிகள் கடத்தல் வழக்கு: நித்யானந்தாவின் 2 பெண் சீடர்களுக்கு ஜாமீன் மறுப்பு

2 சிறுமிகள் கடத்தல் வழக்கில், நித்யானந்தாவின் 2 பெண் சீடர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

ஆமதாபாத்,

தமிழகத்தை சேர்ந்த சாமியார் நித்யானந்தாவின் ஆசிரம கிளை குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ளது. இங்கு முன்னாள் சீடர் ஜனார்த்தன் சர்மா என்பவரின் 2 பெண் குழந்தைகளை கடத்திவைத்து, கொடுமைப்படுத்துவதாக புகார் செய்யப்பட்டது. ஆமதாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளூர் ஆசிரம பொறுப்பாளர் பிரன்பிரியா, அவரது உதவியாளர் பிரியா தத்வா ஆகிய 2 பெண் சீடர்களை கடந்த மாதம் 20-ந் தேதி கைது செய்தனர்.

அவர்களது இடைக்கால ஜாமீன் மனு ஏற்கனவே 27-ந் தேதி உள்ளூர் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 பேர் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. 2 பேரும் மிக தீவிரமான குற்றத்தில் ஈடுபட்டு இருப்பதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்