செய்திகள்

பாகிஸ்தான் சிறைகளில் 546 இந்திய கைதிகள்

பாகிஸ்தான் நாட்டு சிறைகளில் 546 இந்தியர்கள் கைதிகளாக உள்ளனர். அவர்களில் 52 பேர் பொது மக்கள் மற்றும் 494 பேர் மீனவர்கள்.

இஸ்லாமாபாத்,

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த 2008ம் ஆண்டு மே 21ல் தூதரக அளவிலான தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 என வருடத்திற்கு இரு முறை இரு நாடுகளின் சிறைகளில் உள்ள கைதிகளின் தகவல்கள் பரிமாறி கொள்ளப்படும்.

அதன் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு இன்று இந்திய தூதர் கவுதம் பேம்பவாலேவிடம் இந்திய கைதிகள் அடங்கிய பட்டியல் ஒன்றை அளித்தது.

இதேபோன்று, இந்திய சிறைகளில் உள்ள அந்நாட்டு கைதிகள் அடங்கிய பட்டியலை இந்திய அரசும் புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு அளிக்கும் என இந்திய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 1ல் பாகிஸ்தான் அரசு இந்தியாவிற்கு அளித்த பட்டியலின்படி, பொது மக்களில் 54 பேர் மற்றும் 297 மீனவர்கள் என 351 பேர் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 6ந்தேதி 219 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து ஜூலை 10ந்தேதி ஒரு குடிமகன் மற்றும் 77 மீனவர்களை பாகிஸ்தான் விடுவிக்கும் என்றும் இந்திய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு