செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட வழக்கில் கைதான அமுல்யாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீதிபதி உத்தரவு

பெங்களூருவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட வழக்கில் கைதான அமுல்யாவை மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பெங்களூரு,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற கல்லூரி மாணவி அமுல்யா என்பவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அவரை உப்பார்பேட்டை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைத்தனர். சிறையில் வைத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் அமுல்யாவின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால், போலீசார் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்தபடியே அமுல்யாவ பெங்களூரு மட்ரோபாலிட்டன் கோர்ட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, அமுல்யாவை மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதற்கிடையே, அமுல்யாவுக்கு ஜாமீன் கேட்டு வக்கீல் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் நேற்று அவர் கோர்ட்டில் ஆஜராகாமல், இந்த வழக்கில் இருந்து விலகிவிட்டார். இதனால் நேற்று ஜாமீன் மனு மீதான விசாரணை நடக்கவில்லை.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்