செய்திகள்

வரதட்சணை கேட்டு பெண் கழுத்தை நெரித்து கொலை மைத்துனர் உள்பட 4 பேர் கைது

வரதட்சணை கேட்டு பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த மைத்துனர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

புனே,

புனே தனோரி பகுதியை சேர்ந்த பெண் கவிதா (வயது 28). இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இந்த நிலையில், அவரது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கவிதாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று இது தொடர்பாக கவிதாவுக்கும், அவரது கணவர் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் கவிதாவை கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து கவிதாவின் மைத்துனர் சோனு ஆஞ்சநேயா (24) மற்றும் 3 பெண்களை கைது செய்தனர். சம்பவத்தின் போது கவிதாவின் கணவர் வீட்டில் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

வரதட்சணைக்காக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தனோரி பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்