செய்திகள்

ஹோலி கொண்டாட்டத்தில் பரிதாபம்: 14 பேர் நீரில் மூழ்கினர்; சாலை விபத்தில் 3 பேர் பலி

பல இடங்களில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தில் 14 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

புவனேஸ்வர்,

ஒடிசாவில் நேற்று ஹோலி பண்டிகை மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வண்ணப்பொடிகளை ஒருவருக்கொருவர் பூசியபடி நடந்த இந்த கொண்டாட்டத்தில், பலர் குளிக்கச்சென்றபோது குளம், கால்வாய், அணைகளில் தவறி விழுந்த சம்பவம் நடந்துள்ளது.

பாலசோர் மாவட்டம் கட்டாக்கில் உள்ள மகாநதி ஆற்றில் குளித்த 2 பேர் மூழ்கினர். இதேபோல் மாநிலத்தின் பல இடங்களில் அணை, கால்வாய் மற்றும் ஆறுகளில் பெண் உள்பட 8 பேர் நீரில் மூழ்கினர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

தன்கனல் மாவட்டத்தில் ஹோலி கொண்டாடிவிட்டு சென்றபோது மரம் மீது மோட்டார் சைக்கிள் மோதி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல இடங்களில் கோஷ்டி மோதல் நடந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்திலும் ஹோலி கொண்டாடிய சிறுவர்கள் குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி பலியானார்கள்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு