கடந்த இரு ஆட்டங்களில் மும்பை, ராஜஸ்தான் அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்ததால் கூடுதல் நம்பிக்கையை பெற்றுள்ள பெங்களூரு அணியில் கேப்டன் கோலி, தேவ்தத் படிக்கல், மேக்ஸ்வெல், கே.எஸ்.பரத் நல்ல பார்மில் இருப்பதால் அவர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணி முந்தைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை கடைசி ஓவரில் தோற்கடித்ததால் பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. இருப்பினும் 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 7 தோல்வி) உள்ள பஞ்சாப் அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ரன்ரேட்டிலும் ஆரோக்கியமான நிலையை எட்ட வேண்டியது முக்கியம். ஒன்றில் தோற்றாலும் வெளியேற்றம் தான். ஏற்கனவே பெங்களூருவை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கும் பஞ்சாப் அணி மீண்டும் அசத்த வேண்டும் என்றால் கேப்டன் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், மார்க்ராம் பேட்டிங்கில் ஜொலிக்க வேண்டியது அவசியமாகும். மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் 150 ரன்கள் எடுத்து விட்டாலே சவாலாக இருக்கும்.