சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அனைத்து கோவில்களையும் மூடுவதால் மக்கள், வணிகர்கள் என லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக கோவில்களையும் திறக்குமாறு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக வரும் 7ந்தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடக்கிறது.
சென்னை காளிகாம்பாள் கோவிலுக்கு முன்பாக நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன். இதனை தொடர்ந்து கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் அருகே பா.ஜ.க. சிறுபான்மையினர் அணி தலைவர்கள் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.