சென்னை,
இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோருடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களிடத்தில் பாஜகவின் கொள்கைகளை கொண்டு செல்வோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் இப்போது தான் தொடர்கிறது. தமிழக நலன், தமிழர்கள் நலனை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். வரும் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இடம்பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.