மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளித்தபோது கல்குவாரி குட்டையில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி

சிக்கராயபுரம் கல்குவாரி குட்டையில் நண்பர்களுடன் குளித்த பிளஸ்-1 மாணவர், நீரில் மூழ்கி பலியானார்.

பிளஸ்-1 மாணவர்

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவருடைய மகன் திருமூர்த்தி (வயது 16). இவர், சின்மயா நகரில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்கச்சென்றார். அங்கு நண்பர்கள் அனைவரும் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கல்குவாரி குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்ற திருமூர்த்தி, நீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள், அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.இதுபற்றி தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள், கல்குவாரி குட்டையில் மூழ்கிய திருமூர்த்தியை தேடினர். அதற்குள் இருட்டிவிட்டதால் தேடும் பணியை கைவிட்டனர்.

பிணமாக மீட்பு

நேற்று காலை மீண்டும் கல்குவாரி குட்டையில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், மாணவர் திருமூர்த்தியை தேடினர். சிறிது நேரத்துக்கு பிறகு திருமூர்த்தியை பிணமாக மீட்டனர். இதுபற்றி மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு