மாவட்ட செய்திகள்

பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது 38 பவுன் மீட்பு

பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது 38 பவுன் மீட்பு.

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி, அலங்காநல்லூர், நாகமலைபுதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சாலையில் நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வந்து 2 பர் நகைகளை பறித்து வந்தனர். இவர்களை பிடிப்பதற்கு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில் சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கிய ஆனந்தராஜ் ஆலோசனையின்படி சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் குற்றவியல் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஷ், ஆனந்தகுமார், ஏட்டுகள் டார்வின், மகேந்திரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் அவர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று தோடனேரி பிரிவில் சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

அந்த 2 பேரும் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினர். அதன்பின் சமயநல்லூர், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், நாகமலைபுதுக்கோட்டை பகுதிகளில் பெண்களிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர். விசாரணையில் அலங்காநல்லூர் கோட்டைமேட்டை சேர்ந்த ஜெயகிருஷ்ணன்(வயது 23), குறவன்குளத்தை சேர்ந்த சூரியக்குமார்(22) என்று தெரியவந்தது. அவர்களிடமிருந்து 38 பவுன் நகைகளையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் போலீசார் மீட்டனர். 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்