மாவட்ட செய்திகள்

பட்டிவீரன்பட்டி அருகே கோவிலில் சிலை திருடிய 2 பேர் கைது

பட்டிவீரன்பட்டி அருகே கோவிலில் சிலை திருடிய 2 பேர் கைது.

பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை சாலையில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் சோலை ஈஸ்வரன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் கோவிலை திறக்க பூசாரி வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது ஐம்பொன்னாலான அம்மன் சிலை, மைக்செட் உள்ளிட்ட சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் கணபதிமுருகன் கொடுத்த புகாரின்பேரில் பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அய்யம்பாளையத்தை சேர்ந்த பாண்டி (வயது 20) மற்றும் அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன்(43) ஆகியோர் கோவிலில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த அம்மன் சிலை மற்றும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு