மும்பையில் மழை
மராட்டியத்தில் தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்க உள்ளது. இந்தநிலையில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன், 48 மணி நேரத்துக்கு மராட்டியத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மும்பை மற்றும் மாநிலத்தின் கடலோர பகுதிகளில் சனிக்கிழமை வரை மழை கொட்டித்தீர்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மரத்வாடா, விதர்பா
மேலும் இதுகுறித்து வானிலை ஆய்வு மையம், தற்போது உள்ள வானிலை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், வெவ்வேறு அளவில் மழை பெய்யலாம். நந்துர்பர் முதல் சோலாப்பூர் வரை உள்ள மத்திய மராட்டிய பகுதிகளிலும் மழை பெய்யலாம். மரத்வாடா, விதர்பா பகுதியிலும் அடுத்த 48 மணி நரத்திற்கு இடியுடன் கூடிய, லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது.