மாவட்ட செய்திகள்

போலி டாக்டர்கள் 2 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே போலி டாக்டர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டம் நத்தம், செந்துறை பகுதிகளில் பொதுமக்களுக்கு போலி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதாக மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு புகார் வந்தது.

அதன்பேரில் நத்தம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் தங்கதுரை தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி மற்றும் அதிகாரிகள் நேற்று மணக்காட்டூர், செந்துறை பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் திடீர் சோதனை செய்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கம் (வயது 50), மணக்காட்டூரை சேர்ந்த வனிதா (42) ஆகியோர் டாக்டருக்கு படிக்காமல் அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.

இது தொடர்பாக நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்