மாவட்ட செய்திகள்

மணல் கடத்திய 2 லாரிகள் சிக்கியது; டிரைவர்கள் 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே 2 லாரிகளில் உரிய அனுமதியின்றி ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த 2 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.

மணல் கடத்தல்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை-சத்யவேடு சாலையில் மாவட்ட சிறப்பு தனிப்படை போலீசார் வாகன சோதனையின் போது, ஆந்திராவில் இருந்து உரிய அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 2 லாரிகள் சிக்கியது.

இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 லாரிகளில் மொத்தம் 20 டன் மணல் கடத்தி வந்த டிரைவர்களான சுண்ணாம்புகுளம் மூல ரோடு பகுதியை சேர்ந்த வினோத் (வயது 29) மற்றும் செல்வம் (44) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மணலுடன் லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மற்றோரு சம்பவம்

அதே போல கும்மிடிப்பூண்டியில் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகளின் சோதனையின்போது ஆந்திராவில் இருந்து உரிய அனுமதியின்றி மணல் கடத்தி வந்த ஒரு லாரி சிக்கியது. அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்த நிலையில், தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்