மாவட்ட செய்திகள்

விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரியில் 20 டன் அரிசியில் அன்னபூஜை

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி 20 டன் அரிசியை குவித்து வைத்து அன்னபூஜை நடத்தப்பட்டது.

தினத்தந்தி

கன்னியாகுமரி,


சுவாமி விவேகானந்தர் 1902ம் ஆண்டு ஜூலை 4ந் தேதி சமாதி அடைந்தார். அவரது நினைவு தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் கேந்திர கிராம முன்னேற்ற திட்டத்தின் சார்பில் அரிசியை மலை போல் குவித்து வைத்து அன்னபூஜை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று அன்னபூஜை நடைபெற்றது. இதற்காக குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து அரிசி வசூல் செய்யப்பட்டது.


இந்த ஆண்டு 20 டன் அரிசி கிடைத்தது. அரிசியை கேந்திர வளாகத்தில் குவித்து வைத்து அன்னபூஜை நடத்தப்பட்டது. விவேகானந்த கேந்திராவை சேர்ந்த லீலா, சந்திரா ஆகியோர் ஐக்கிய மந்திரம் ஓதினார்கள். தூத்துக்குடி மண்டல கேந்திர பொறுப்பாளர் பரமகுரு வரவேற்று பேசினார்.

மூத்த ஆயுள் கால ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா அகில பாரத பொதுச்செயலாளர் பானுதாஸ், மணி மகேஷ்வரன், கேந்திர செயலாளர் அனுமந்தராவ், தலைமை நிலைய செயலாளர் ரகுநாதன்நாயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை