மாவட்ட செய்திகள்

பாபநாசத்தில் 268 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா

பாபநாசத்தில் 268 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது.

தினத்தந்தி

கபிஸ்தலம்,

பாபநாசம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் சமூகநலத்துறை மற்றும் சத்துணவு திட்ட துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட சமூகநல அலுவலர் ராஜேஸ்வரி வரவேற்று பேசினார்.

நகர கூட்டுறவு வங்கி தலைவர் சபேசன், வேளாண்மை துணை இயக்குனர் பழனிசாமி, நகர கூட்டுறவு வங்கி துணை தலைவர் சதீஷ், இயக்குனர்கள் முருகதாஸ், சின்னையன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் முத்து, நடராஜன், சேக் தாவூது, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் முருகன், சுப்பிரமணியன், பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் துரைக்கண்ணுவின் மனைவி பானுமதி கலந்துகொண்டு 268 பேருக்கு தலா 1 பவுன் வீதம் தாலிக்கு தங்கம் மற்றும் 183 பேருக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை, 85 பேருக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கினார். விழாவில் ஒன்றிய ஆணையர் சாமிநாதன், விரிவாக்க அலுவலர் பூரணம், ஊர் நல அலுவலர்கள் பர்மிளா, ரூபாலா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கிராம ஊராட்சிகள் ஆணையர் அறிவானந்தம் நன்றி கூறினார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்