கோத்தகிரி,
கோத்தகிரி- குன்னூர் சாலையில் கட்டப்பெட்டு பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது உரிய ஆவணங்கள் இன்றி தும்மனட்டி கிராமத்தை சேர்ந்த முகேஷ் என்பவர் கொண்டு வந்த 99 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோன்று கூடலூர் அருகே தொரப்பள்ளியில் கேரளாவில் இருந்து கர்நாடகா நோக்கி சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 28 புதிய கைக்கெடிகாரங்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கூடலூர்-ஊட்டி சாலையில் உள்ள சில்வர் கிளவுட் சோதனைச்சாவடியில் ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.1.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.