மாவட்ட செய்திகள்

குளோப் ஜாமூன் தயாரிக்க வைத்திருந்த சர்க்கரை பாகில் விழுந்து 2 வயது சிறுவன் பலி

அவுரங்காபாத்தில், குளோப் ஜாமூன் தயாரிக்க வைத்திருந்த சர்க்கரை பாகில் விழுந்து 2 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

தினத்தந்தி

அவுரங்காபாத்,

அவுரங்காபாத் பைதான் கேட்டில் உள்ள தலால்வாடி பகுதியில் சம்பவத்தன்று மத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வழங்க

உணவு தயாரிக்கப்பட்டது. அந்த பகுதியில் ராஜ்விர் நித்தின்(வயது2) என்ற சிறுவன் விளையாடி கொண்டு இருந்தான். இதில் சிறுவன் எதிர்பாராதவிதமாக குளோப்

ஜாமூன் தயாரிப்பதற்காக பெரிய பாத்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த சர்க்கரை பாகில் தவறி விழுந்தான்.

கொதித்து கொண்டு இருந்த சர்க்கரை பாகில் விழுந்ததால் சிறுவனின் உடல் வெந்தது.

அங்கு இருந்தவர்கள் வலியில் அலறி துடித்த சிறுவனை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவன் சிகிச்சை பலன் இன்றி

பரிதாபமாக உயிரிழந்தான். 2 வயது சிறுவன் சர்க்கரை பாகில் தவறி விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு