ஸ்ரீவைகுண்டம்:
செய்துங்கநல்லூரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் ரோந்து
ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செய்துங்கநல்லூர் சுடுகாடு அருகே மோட்டார் சைக்கிளுடன் 3 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றுகொண்டிருந்தனர்.
அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், செய்துங்கநல்லூர் வி.கோவில்பத்தை சேர்ந்த மந்திரம் மகன் சுந்தரம் என்ற கோட்டை (வயது 22), கொங்கராயகுறிச்சியை சேர்ந்த பழனி மகன் வேல்பாண்டி (20), செய்துங்கநல்லூர் அய்யமார்தெருவை சேர்ந்த கொம்பையா மகன் கிருஷ்ணமூர்த்தி (19) உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
அந்த 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா விற்றது தெரியவந்தது. இது தொடர்பாக செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சுந்தரம் மீது ஏற்கனவே செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.