மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்ற டெய்லர் உள்பட 3 பேர் கைது

மல்லூர் அருகே கஞ்சா விற்ற டெய்லர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பனமரத்துப்பட்டி:-

மல்லூர் அருகே உள்ள தாசநாயக்கன்பட்டி பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையிலான மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் தனிப்படை போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தாசநாயக்கன்பட்டி சவுடாம்பிகா நகர் மயானம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த தம்மநாயக்கன்பட்டி கிராமம் ஸ்ரீ அம்மன் நகர் பகுதியை சேர்ந்த டெய்லர் பழனியாண்டி (வயது 26), தம்மநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த வெள்ளி பட்டறை தொழிலாளி தமிழ்ச்செல்வன் (24), சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி தமிழரசன் (23) ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவையும், 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்