மாவட்ட செய்திகள்

ரவுடி உள்பட 3 பேர் கைது

சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் ரவுடி உள்பட 3 பேர் கைது

பெங்களூரு:

பெங்களூரு சித்தாபுரா போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சிவக்குமார். இவர், சக போலீஸ்காரர்களுடன் டி.மரியப்பா ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை அவர் வழிமறித்தார்.

ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றி திரிவது குறித்து அவர்களிடம், சப்-இன்ஸ்பெக்டர் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் மற்ற போலீஸ்காரர்களுடன், 3 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற 3 பேரையும் சப்-இன்ஸ்பெக்டர் மடக்கி பிடித்தார்.

இந்த நிலையில், தன்னிடம் இருந்த அரிவாளை காட்டி சிவக்குமாரை கொலை செய்து விடுவதாக 3 பேரும் மிரட்டினார்கள். உடனே 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தார்கள்.

விசாரணையில், அவர்கள் ஜெயநகரை சேர்ந்த ரவுடியான நவீன் (வயது 27), மாகடி ரோடு பகுதியை சேர்ந்த சோமசேகர் (29) மற்றும் பிரசன்னா (27) என்று தெரிந்தது.

அவர்களிடம் இருந்து அரிவாள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேர் மீதும் சித்தாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்