இந்த நிலையில் சேலம் மாநகரத்தை பொறுத்தவரை அன்னதானப்பட்டி, டவுன், சூரமங்கலம், அம்மாபேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதில் சூரமங்கலம், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஈரோடு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக சேலம் மாநகருக்கு 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வந்துள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் உள்ள இவர்களுக்கு விரைவில் மாநகரில் பணியிடம் ஒதுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.