நாமக்கல்,
முதல்கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. தற்போது 2-ம் கட்டமாக இந்த மாதம் 1-ந் தேதி முதல் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
இப்பணி வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைய இருப்பதாகவும், தினசரி 4,800 லிட்டர் வீதம் கிருமிநாசினி மருந்து 2 வாகனங்கள் மூலம் தெளிக்கப்பட்டு வருவதாகவும் நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் கூறினார்.