மாவட்ட செய்திகள்

5 நாட்கள் தடை உத்தரவுக்கு பின்னர் திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி

5 நாட்கள் தடை உத்தரவுக்கு பின்னர் நேற்று திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருக்கோவில் மலை மேல் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நெருங்கியதையொட்டி, கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 31-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் ஆடிக்கிருத்திகை விழாவன்று வழக்கமாக நடைபெறும் அனைத்து சிறப்பு பூஜை, தெப்ப உற்சவ வைபவங்கள் பக்தர்களின்றி மலைக்கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. இந்தநிலையில் 5 நாட்கள் தடை உத்தரவுக்கு பின்னர், நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு மலைக்கோவிலில் அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக கோவிலில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றன. நேற்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் சில பக்தர்கள் காவடியுடன் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தியதை காண முடிந்தது.

இந்தநிலையில் பக்தர்கள் கூட்டத்தால் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பரவலை தடுக்கும் வகையில் அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்