மாவட்ட செய்திகள்

புனேவில் இருந்து 5 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசும் தமிழகத்திற்கு தடுப்பூசிகளை தேவைக்கு ஏற்ப அனுப்புகிறது.

தமிழகத்திற்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும் தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் இதுவரை 2 கோடியே 21 லட்சத்து 45 ஆயிரத்து 260 கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்து உள்ளன.இந்த நிலையில் நேற்று மராட்டிய மாநிலம் புனே சீரம் நிறுவனத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கூடுதலாக 42 பெட்டிகளில் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழக அரசுக்கு வந்தன. அவை தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. தடுப்பூசிகள் தேவைப்படும் மாவட்டங்களுக்கு உடனே பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்