மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 ஆயிரத்து 427 பேர் வேட்பு மனு தாக்கல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் 5 ஆயிரத்து 427 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் நேற்று மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 20 பேர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 244 பேரும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 963 பேரும், கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு 4,200 பேரும் என மொத்தம் 5 ஆயிரத்து 427 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 5 ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 22 வேட்பு மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 168 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 628 மனுக்களும், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,590 வேட்புமனுக்களும் என மொத்தம் 3 ஆயிரத்து 408 பேர் மனுதாக்கல் செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்