மாவட்ட செய்திகள்

பண்ருட்டியில் 5 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்துச்சென்று சில்மிஷம் வாலிபர் கைது

பண்ருட்டியில் 5 வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச்சென்று சில்மிஷம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி

பண்ருட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் சேட்டு என்கிற தியாகராஜன்(வயது 30). சம்பவத்தன்று இவர், அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார்.

பின்னர் அவளை, அவருடைய வீட்டுக்கு அழைத்து வந்தார். அங்கு அந்த சிறுமியை, தியாகராஜன் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் சிறிது நேரம் கழித்து அவரது வீட்டில் இருந்து அழுது கொண்டே அந்த சிறுமி வெளியே வந்தார். தனதுக்கு நடந்த கொடுமை குறித்து அவள், தனது தாயிடம் கூறி அழுதாள்.

இது குறித்து அந்த சிறுமியின் தாய், பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குப்பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்