மாவட்ட செய்திகள்

புனேவில் இருந்து 6 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி சென்னை வந்தது

புனேவில் இருந்து 6 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி சென்னை வந்தது.

தினத்தந்தி

ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. எனவே மத்திய மருந்து தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அதன்படி மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து கோவிஷீல்டு மற்றும் கோவக்சின் தடுப்பூசி மருந்துகள் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் புனேவில் இருந்து 50 பார்சல்களில் 6 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னைக்கு வந்தன. கொரோனா தடுப்பூசிகளை தமிழக சுகாதார அதிகாரிகள் கன்டெய்னர் மூலமாக சென்னையில் உள்ள மருத்துவ தலைமை கிடங்கிற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை