போதைப்பொருள் வழக்கு
இமாச்சல பிரதேசத்தில் இருந்து புனேக்கு கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ரெயில் மூலமாக போதைப்பொருள் கடத்தல் சம்பவம் நடந்தது. இதில் தொடர்புடைய 2 பேர் பிடிபட்டனர். கடத்தப்பட்ட 34 கிலோ சரஸ் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் ஆகும். போதைப்பொருள் கடத்தி வந்த லலித்குமார் சர்மா, காலுசிங் ஆகிய 2 பேர் புனே உள்பட மும்பை, கோவா, பெங்களூரு, பகுதிக்கு வினியோகம் செய்ததாக தெரியவந்தது.இந்த வழக்கை பயங்கரவாத தடுப்பு படைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
8 போலீசார் பணி இடைநீக்கம்
இந்த விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் பிடிபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய ரெயில்வே போலீசார் தாமதம் செய்ததாக தெரியவந்தது. இதையடுத்து ரெயில்வே கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரக்யா தவறுக்கு காரணமான புனே ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சிங் கவுர், போலீஸ்காரர்கள் சந்தோஷ் லகே, மாதவ் மாருதி ஜென்டே, கணேஷ் அசோக் ஷிண்டே, ஸ்ரீகாந்த், கங்காதர் கேசவ், அசோக் அக்பர் கைலாஷ் ஜாதவ் என 8 போலீசாரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.