மாவட்ட செய்திகள்

85 டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ரூ.8 லட்சம் அபராதம்: கூடுதல் விலைக்கு மதுவிற்றதால் நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மது விற்ற 85 விற்பனையாளர்களுக்கு ரூ.8¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்,

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கினால் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனையில் சரிவு ஏற்பட்டது. இதனால் மதுபானங்களின் விலையை அரசு உயர்த்தியது. அதன்படி குவார்ட்டருக்குரூ.5 முதல் ரூ.10 வரையும், பீருக்கு ரூ.10 முதல் ரூ.20 வரையும் மதுபானங்களின் ரகத்திற்கு ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டது. இந்தநிலையில் டாஸ்மாக் கடைகளில் தற்போது குறைந்தபட்சம் ரூ.30 வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனிடையே ஊரடங்கு காலத்தில் முறைகேடாக மது விற்பனை செய்ததால் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்களிடம் ஜி.எஸ்.டி.யுடன் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த சூழலில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார்.

அதில், கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக தனிப்படைகள், வெவ்வேறு மாவட்டத்தை சேர்ந்த மேலாளர்கள் மூலம் கடைகளில் சோதனை நடத்துவார்கள் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் வெவ்வேறு மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள், டாஸ்மாக் கடைகளில் சோதனை நடத்தி கூடுதல் விலைக்கு மது விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தது தொடர்பாக 85 விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை என மொத்தம் ரூ.8 லட்சத்து 81 ஆயிரத்து 460-ஐ அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகைக்கு ஜி.எஸ்.டி. வரியும் சேர்த்து விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூடுதல் விலைக்கு மது விற்பனையில் ஈடுபட்ட விற்பனையாளர்களை இடமாற்றம் செய்யவும் டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இந்த அதிரடி சோதனை நடைபெறும் என்றும், எனவே டாஸ்மாக் கடைகளில் உரிய விலைக்கு மட்டுமே மதுபாட்டில்களை விற்பனை செய்ய வேண்டுமென டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், ஒவ்வொரு டாஸ்மாக் கடையில் இருந்தும் மாதந்தோறும் உயர் அதிகாரிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்க வேண்டி உள்ளது. எங்களை கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யச்சொல்லி கட்டாயப்படுத்துவதே அதிகாரிகள்தான். ஆனால் தற்போது எங்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளனர். டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த ஒருதலைபட்சமான நடவடிக்கையை எதிர்த்துநாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு