செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த வடக்கு வயலூர் கிராமத்தில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் இருந்து வந்தது. அந்த மரம் நேற்று பெய்த கனமழையின் காரணமாக வேருடன் சாய்ந்தது.
இதையடுத்து பொதுமக்கள் தாரை, தப்பட்டையுடன் வந்து அந்த மரத்துக்கு பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து வழிபட்டனர்.