மாவட்ட செய்திகள்

வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் வாகனங்களை ஆய்வு செய்ய 3½ ஏக்கர் இடம் தயாராகிறது

வட்டார அலுவலகத்துக்கு வரும் வாகனங்களை ஆய்வு செய்ய 3½ ஏக்கர் இடம் தயாராகிறது. இதற்காக சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

புதுச்சேரி,

புதுச்சேரி முதலியார்பேட்டை 100 அடி சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம், புதிய வாகன பதிவு, இருசக்கர வாகனங்களை ஓட்டிக் காட்டுதற்கான இடம் உள்ளிட்ட சாலை போக்குவரத்து தொடர்பான பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு அங்குள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டில் குறுகிய சாலை வழியாகத்தான் அனைத்து வாகனங்களும் வந்து செல்கின்றன.

வாகன பதிவு, புதுப்பிக்கப்பட்ட தகுதி சான்றிதழ்கள் பெறுவது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக அதிக அளவில் வாகனங்கள் இந்த வழியாக சென்று வந்தன. நெருக்கடியான இடத்தில் வந்து செல்ல பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்தது.

புதிய இடம் தேர்வு

இதற்கு தீர்வு காணும் வகையில் புதுச்சேரி முதலியார்பேட்டை- தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் இடையே 13 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கப்பட்டது. வாகனங்களை ஆய்வு செய்வதற்கு வசதியாக மத்திய அரசின் நிதியிலிருந்து ரூ.17 கோடியில் 3 ஏக்கரில் மணல் கொட்டி இடத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

மீதமுள்ள 10 ஏக்கர் நிலத்தில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி தொடங்க திட்டமிடப் பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு