மாவட்ட செய்திகள்

முள்ளக்காடு அருகே வாலிபரை கத்தியால் தாக்கிய அண்ணன், தம்பி மீது வழக்கு

முள்ளக்காடு அருகே வாலிபரை கத்தியால் தாக்கிய அண்ணன், தம்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு தேவி நகரைச் சேர்ந்த மரியதாஸ் மகன் செல்வகுமார் (வயது 18). இவர் முள்ளக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கே இரு தரப்பினர் சண்டையிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்களை சமாதானம் செய்ய முயன்றபோது, அதில் இருந்த முத்தையாபுரம் ராஜீவ் நகரைச் சேர்ந்த ஜேசுதாஸ் மகன் சதீஷ் (24) மற்றும் அவரது அண்ணன் சுதாகர் (26) ஆகிய இருவரும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதனையடுத்து செல்வகுமார் அவருடைய அண்ணன் சரத்குமாருடன் சென்று இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது, அவர்கள் கையில் வைத்திருந்த சிறிய கத்தியால் செல்வகுமாரை வெட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

காயமடைந்த செல்வகுமார் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணன், தம்பிகளான சுதாகர், சதீஷ் ஆகியோர் மீது முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்