திருவொற்றியூர்,
கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள 14 வார்டுகளிலும் சுகாதாரத்துறை வருவாய் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது முக கவசம் அணியாமல் சென்ற பொதுமக்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் முக கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி தலா ரூ.200 அபராதம் விதித்தனர். திருவொற்றியூர் மண்டலத்தில் இதுவரை மொத்தம் ரூ.17 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.