மாவட்ட செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே அட்டை பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூர் அருகே அட்டை பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்-காட் பகுதியில் அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தொழிற்சாலையின் உள்ளே இருந்து நேற்று புகை வரத்தொடங்கியது. இதை பார்த்த தொழிற்சாலையின் காவலாளி ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

நேற்று விடுமுறை தினம் என்பதால் இந்த தீ விபத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்