மாவட்ட செய்திகள்

வேலை பார்க்கும் வீட்டில் ரூ.1¾ லட்சம் திருடிய பெண் கைது

மதுரையில் வேலை பார்க்கும் வீட்டில் ரூ.1¾ லட்சம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

மதுரை,

மதுரை ஜீவாநகரைச் சேர்ந்தவர் சையதுநூர்தீன் மவுலானா (வயது 58). சம்பவத்தன்று இவர் ஊருக்கு சென்றிருந்தார். பின்னர் அவர் திரும்பி வந்த போது வீட்டின் பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசில் அவர் புகார் செய்திருந்தார். அதில் வீட்டில் வேலை செய்யும் வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேஸ்வரி மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன் பேரில் போலீசார் ராஜேஸ்வரியை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் தான் பணத்தை எடுத்திருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து ராஜேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்