மாவட்ட செய்திகள்

வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி

கிருஷ்ணகிரியில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி:

லாரி மோதியது

கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கலேரி மலைசந்து பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி நதியா (வயது 33). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் கங்கலேரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர். ராயக்கோட்டை சாலையில் அவர்கள் வந்த போது பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் நதியா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். பழனி படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழிலாளி

நாகரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (41). தொழிலாளி. இவர் மோட்டார்சைக்கிளில் கிருஷ்ணகிரி - தர்மபுரி சாலையில் ஆவின் மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மாதேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது