மாவட்ட செய்திகள்

அசாமில் விபத்தில் ராணுவ வீரர் சாவு காஞ்சீபுரத்தை சேர்ந்தவர்

அசாமில் நடந்த விபத்தில் காஞ்சீபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

காஞ்சீபுரம்,

அசாம் மாநிலத்தில் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் சென்ற வாகனம் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. அந்த டிரக்கில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் பலர் காயம் அடைந்தனர்.

இதில் காஞ்சீபுரத்தை அடுத்த வெள்ளை கேட் பகுதியில் உள்ள செம்பரபாக்கம் கிராமத்தை சேர்ந்த ஏகாம்பரம் (வயது 45) பரிதாபமாக உயிரிழந்தார்.

இவர் கடந்த 2000-ம் ஆண்டு ராணுவ பணியில் சேர்ந்தார். இவரது மனைவி குமாரி (35), மகன் ஆதித்யா (16), மகள் ஜெனி (14). ஏகாம்பரம் ஓய்வு பெற இன்னும் 6 மாதங்களே உள்ளது.

ஏகாம்பரத்தின் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது