மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில் விபத்து: 3 வயது குழந்தை பலி

நாமக்கல்லில் நடந்த விபத்தில் 3 வயது குழந்தை பலியானது.

நாமக்கல்,

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட போதுப்பட்டி லக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகள் சஷ்மிதா (வயது 3). கடந்த 8-ந் தேதி பழனிசாமியின் அக்காள் பொன்னம்மாள் தனது மகன் நிகேஷ் (9), சஷ்மிதா ஆகிய இருவரையும் மொபட்டில் ஏற்றிக்கொண்டு செல்போன் வாங்க சென்றார்.

நாமக்கல் பஸ்நிலையம் அருகே வந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவர்களின் மொபட் மீது மோதியது. இதில் நிகேஷ், சஷ்மிதா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் சஷ்மிதா சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பலன்இன்றி நேற்று காலை சஷ்மிதா பரிதாபமாக இறந்தாள்.

இது குறித்து பொன்னம்மாள் கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு