மாவட்ட செய்திகள்

சேதமடைந்த மின்கம்பங்களால் விபத்து அபாயம்

பெரியகுளம் பகுதியில் சேதமடைந்த மின் கம்பங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

தேனி :

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கீழவடகரை ஊராட்சியில் பெருமாள்புரம் கிராமம் உள்ளது.

இங்கு கும்பக்கரை அருவிக்கு செல்லும் சாலையில் 3 மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது.

இதில் உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இப்பகுதியில் ஆட்டோ நிறுத்தம் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.

மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

அதேபோன்று கும்பக்கரை அருவிக்கு செல்லும் வழியில் சோதனைச் சாவடி அருகேயும் 2 மின்கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன.

எனவே சேதம் அடைந்த மின் கம்பங்களை மாற்றியமைக்க மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு