மாவட்ட செய்திகள்

சென்டிரல் ரெயில் நிலையத்தில் குடிபோதையில் ரகளை செய்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை

சென்னை சென்டிரல் புறநகர் ரெயில் நிலையத்தில் போலீஸ்காரர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டார்.

தினத்தந்தி

ஆர்.பி.எப். போலீசார் அவரை சமாதானப்படுத்தினார்கள். அவர்களிடமும் தகராறு செய்தார். அதன்பிறகு ரெயில்வே போலீசார் சமாதானப்படுத்தி அழைத்து செல்ல முற்பட்டனர். அவர் வெளியில் போக மறுத்து சண்டை போட்டார். அவரது பெயர் சபரிக்குமார் (வயது 28) என்றும், பெரியமேடு குற்றப்பிரிவு போலீசில் அவர் பணிசெய்வதும் தெரிய வந்தது.

அவர் மீது பெரியமேடு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. பெரியமேடு போலீசார் அவரை அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். அவர் தகராறு செய்த சம்பவம் வீடியோ படம் எடுக்கப்பட்டுள்ளது. அவர் மீது இலாகா பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்