இதில் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி கலந்து கொண்டு வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கி, சாலை விதிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தினார். பின்னர் போலீஸ் கமிஷனர் ரவி கூறும்போது, சாலை விதிகளை மீறுபவர்கள், சாகசம் என்ற பெயரில் மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவோர், ஒரே மோட்டார்சைக்கிளில் 3 அல்லது 4 பேர் செல்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அந்த வாகனங்களை பறிமுதல் செய்வோம். மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தனி குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது என்றார்.