மாவட்ட செய்திகள்

நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் தொல்லை வழக்கு: நடிகர் அர்ஜூன் விசாரணைக்கு இன்று ஆஜராகிறார்

நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் தொல்லை வழக்கில் நடிகர் அர்ஜூனுக்கு போலீசார் நோட்டீசு அனுப்பியுள்ளனர். இதைதொடர்ந்து நடிகர் அர்ஜூன் இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

பெங்களூரு,

நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் தொல்லை வழக்கில் நடிகர் அர்ஜூனுக்கு போலீசார் நோட்டீசு அனுப்பியுள்ளனர். இதைதொடர்ந்து நடிகர் அர்ஜூன் இன்று (திங்கட்கிழமை) போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

விஸ்மய என்ற கன்னட திரைப்பட படப்பிடிப்பின்போது தனக்கு நடிகர் அர்ஜூன் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை சுருதி ஹரிகரன் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு கப்பன்பார்க் போலீசார், நடிகர் அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கப்பன்பார்க் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் புகாரில் சாட்சிதாரர்களாக சுருதி ஹரிகரன் குறிப்பிட்ட நபர்களுக்கு போலீஸ் சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, நடிகை சுருதி ஹரிகரனின் உதவியாளர் கிரண், படத்தின் பெண் இயக்குனர் மோனிகா, சுருதி ஹரிகரனின் தோழி யசஸ்வினி, படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன், தயாரிப்பாளர் உமேஷ் ஆகியோர் கப்பன்பார்க் போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். நடிகை சுருதி ஹரிகரனின் உதவியாளர் கிரண், பெண் இயக்குனர் மோனிகா, சுருதி ஹரிகரனின் தோழி யசஸ்வினி ஆகியோர் நடிகை சுருதி ஹரிகரனின் புகார் உண்மை என்றும், இயக் குனர் அருண் வைத்தியநாதன், தயாரிப்பாளர் உமேஷ் ஆகியோர் படப்பிடிப்பின்போது எந்த புகாரும் எழவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இருப்பினும், மொத்த சாட்சிகளின் அடிப்படையில் பார்க்கும்போது நடிகர் அர்ஜூன் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகின. இதற் கிடையே, இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் அர்ஜூன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு வழக்கு தொடர்பாக நடிகர் அர்ஜூனை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், சுருதி ஹரிகரனின் புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டி நடிகர் அர்ஜூனுக்கு கப்பன்பார்க் போலீசார் நேற்று முன்தினம் நோட்டீசு அனுப்பினர்.

இதனால் நடிகர் அர்ஜூன் இன்று (திங்கட் கிழமை) கப்பன்பார்க் போலீஸ் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு