மாவட்ட செய்திகள்

அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆண்டு தோறும் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி ஆயர் இல்லத்தின் முதன்மை குரு பன்னீர்செல்வம், அன்னையின் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து திருப்பலி நடந்தது.

நிகழ்ச்சியில், அடைக்கலாபுரம் சூசை அறநிலையத்தின் ஆன்மிக இயக்குனர் செட்ரிக் பீரிஸ், துணை இயக்குனர் சேவியர்ராஜா, பங்கு தந்தை சி.பீட்டர்பால் மற்றும் அருட்சகோதரிகள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். திருவிழா நாட்களில் காலையில் நவநாள் திருப்பலி, மாலையில் சப்பர பவனி மற்றும் ஆராதனை நடைபெறுகிறது.

வருகிற 6-ந் தேதி 9 ம் திருவிழா நடக்கிறது. அன்று நடைபெறும் திருவிழா திருப்பலிக்கு ஏரல் ஒத்தாசை மாதா ஆலய பங்குத்தந்தை சவரிமுத்து தலைமை தாங்கி முதன்முறையாக புதுநற்கருணை பெரும் சிறுவர்களுக்கு நற்கருணை வழங்க உள்ளார். இதைத்தொடர்ந்து மாலையில் நடைபெற உள்ள சிறப்பு ஆராதணையை தொடர்ந்து அதியச ஆரோக்கிய அன்னையின் சப்பர பவனி நடைபெற உள்ளது.

திருவிழாவின் கடைசி நாளான 7-ந் தேதி காலை திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியை, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இல்ல சிறைப்பணி இயக்குனர் ஜான் சுரேஷ் மற்றும் பாளையங்கோட்டை மறைமாவட்ட அருட்தந்தை வியாகப்பன் ஆகியோர் நடத்துகின்றனர். திருவிழாவின் முடிவில் இஞ்ஞாசியார்புரம் பங்குதந்தை சேவியர் அருள்ராஜ் தலைமையில் சிறப்பு நற்கருணை பவனி மற்றும் ஆராதனை நடக்கிறது.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்